கல்பிட்டி பொலிஸ் பிரிவில் கண்டக்குளி கிராமத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமாக திருமண விருந்து நடத்திய ஒரு குழுவினர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருமண விருந்து வழங்கிய வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்தில் கலந்து கொண்டவர்களில் அடையாளம் காணப்பட்ட 5 பேரை தனிமைப்படுத்தவும், அவர்களை பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தவும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருமண நிகழ்வை குறைந்தளவானவர்களுடன் நடத்த சுகாதார அதிகாரிகள் அனுமதித்திருந்தனர். எனினும், இரண்டாம் நாள் இரவு, 100 பேர் வரையில் கூடி விருந்து நிகழ்வு நடந்தது.
இதில் இளைஞர் குழுவொன்று மதுபானம் அருந்தி ஆடல், பாடல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இதை பேஸ்புக்கில் நேரலையாகவும் ஒளிபரப்பினர்.
இது வைரலாக பரவியதையடுத்தே நடவடிக்கையெடுக்கப்பட்டது.