இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

Date:

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு சில நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில் பல நாடுகளில் கொரோனா வைரசின் புதிய, புதிய அலைகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

குறிப்பாக, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அங்கு வேகமாகப் பரவிவருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை கடந்த சில நாட்களாக இருந்து வந்தது.

இந்த நிலையில், இன்றைய பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. அந்நாட்டில் கடந்த பிப்ரவரி 25- ஆம் திகதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுதான் ஆகும். இங்கிலாந்தில் 9,055- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 9 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...

யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன்...

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு  உடந்தையாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்