தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பை ஜனாதிபதி காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளார்.
நாளை (16) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்களை பேசுவதற்காக இந்த சந்திப்பு ஏற்படாகியிருந்தது.
எனினும், சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவலில், சந்திப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய சந்திப்பிற்கான கூட்டமைப்பின் தலைவர்கள் அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் இருந்து இன்று கொழும்பை சென்றடைந்த பின்னர், ஜனாதிபதி செயலகத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1