நடிகர் விஷால் தான் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பைத் மீண்டும் துவங்குவதற்காக ஹைதராபாத் சென்றுள்ளதை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
விஷால் கடைசியாக ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘எனிமி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து தற்போது து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால் 31 படத்தில் நடிக்கிறார். நடிகை டிம்பிள் ஹயாத்தி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கொரோனாவுக்கு மத்தியில் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பைத் துவங்கிய விஷால்!
லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதை அடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடங்கியது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பை மீண்டும் துவங்க விஷால் ஹைதராபாத் சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஹைதராபாத்தில் விஷால் 31 படத்திற்கான படப்பிடிப்பை நாங்கள் மீண்டும் தொடங்குகிறோம் இது ஒரு நீண்ட கால அட்டவணையாக இருக்கப்போகிறது & ஜூலை இறுதிக்குள் திரைப்படத்தை முடிக்க உள்ளோம். எல்லா பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடக்கிறது. மீண்டும் பணிக்கு வந்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் இருந்து ஹைராபத்திற்கு ட்ரெயின் மூலம் சென்றது முதல் ராமோஜி பிலிம் சிட்டிக்குள் செல்வது, அங்கு படப்பிடிப்பைத் துவங்குவது என வீடியோ எடுத்தும் விஷால் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.