தேவையுடையோருக்கு உதவி!

Date:

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் கொரோனாப் பேரிடர் காரணமாகத் தொழில்வாய்ப்பிழந்ததால் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாகத் தனிமைப் படுத்தப்பட்டதாலும், பல வாரங்களாக நாடு முழுமையாக முடக்கப்பட்டு இருப்பதாலும் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றிப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சித்திரைப் புத்தாண்டு தினத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை (13.06.2021) நல்லூர் அரசடி, திருநெல்வேலி பிள்ளையார் வீதி, அரியாலை இராஜேஸ்வரி வீதி, கொக்குவில் கிழக்கு காளி கோவிலடி, உரும்பிராய் பழைய ஆஸ்பத்திரி வீதி, உரும்பிராய் பூதனார் கோவிலடி ஆகிய பகுதிகளிலுள்ள 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.

-கட்சியின் ஊடகப்பிரிவு-

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் குற்றச்சாட்டில் 9,000 இற்கும் அதிக சிறார்கள் கைது

கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் தற்போது வரை, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின்...

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்