முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பு இடம்பெற்று வந்த இடம் முற்றுகையிடப்பட்டதில் 43 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிகவும் சூட்சுமமான முறையில் கசிப்பு காய்ச்சும் தொழிலில் ஈடுபட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை இவர் கைதானதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விமலவீர தெரிவித்தார்.
நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சோதனை செய்ததில் கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தக்கூடிய கோடா உட்பட ஸ்பிரிட் 2 லீற்றரும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் 43 வயதுடைய கரும்புள்ளியான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1