அஜீத்தின் ‘வலிமை’ படத்திலிருந்து முன்னணி நடிகர்கள் விலகியுள்ளதால் இயக்குனருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அஜீத் – எச். வினோத் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘வலிமை’ இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா மிரட்டியுள்ள இப்படத்தில் சுமித்ரா, ராஜ் அய்யப்பா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் 3 சண்டை காட்சிகள் ஐதரபாத்திலும், இரண்டு சண்டைக்காட்சிகள் சென்னையில் நடைபெற்று முடித்துள்ளது. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரானா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேநேரம் சில காட்சிகள் ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட இருந்த நிலையில், அங்கு ஷூட்டிங் நடத்த அனுமதி இல்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே கொரானாவை காரணம் காட்டி ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகவில்லை. இதனால் ‘வலிமை’ படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த படத்தின் இயக்குனர் எச்.வினோத், ‘வலிமை’ படத்திலிருந்து சில முன்னணி நடிகர்கள் விலகி விட்டனர். அவர்களை வைத்து சில காட்சிகளை எடுத்ததாகவும், ஆனால் கொரானாவை காரணம் காட்டி படப்பிடிப்புக்கு வர மறுப்பு தெரிவித்ததாகவும் என வினோத் கூறியுள்ளார். மேலும், அந்த முன்னணி நடிகர்கள் நடித்த சில காட்சிகளை மீண்டும் புதிய நடிகர்கள் வைத்து படப்பிடிப்பு நடத்தவுள்ளோம். அதேபோன்று ஏற்கனவே சில இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியை எடுக்க அந்த பகுதியில் அனுமதி மறுக்கப்படுகிறது. அதனால் விரைவில் அந்த காட்சிகளையும் எடுக்க காத்திருக்கிறோம் என வினோத் தெரிவித்துள்ளார்.