எரிபொருள்களின் விலை அதிகரித்துள்ளது, போக்குவரத்து துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் கெமுனு விஜெரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில், போக்குவரத்துத் துறையில் உள்ள பிற தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும், பின்னர் கட்டண உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
தற்போது பேருந்துகள் இயங்கவில்லை. எதிர்வரும் நாட்களில் COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து அனைத்து சவால்களையும் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து தொழிற்சங்கங்கள் விவாதிக்கும் என்றார்.
இருப்பினும், அலுவலக போக்குவரத்து போன்ற அத்தியாவசிய போக்குவரத்து சேவைகள் தொடரும் என்று விஜெரத்ன கூறினார்.



