சினிமாவில் புகழுடன் இருந்த ராதிகாவுக்கு, ‘சித்தி’ சீரியல் சின்னத்திரையிலும் சிம்மாசனம் அமைத்துக் கொடுத்தது. 22 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான இந்த சீரியல், பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், பிரைம் டைம் சீரியல்களைத் தயாரித்து, அவற்றில் தொடர்ந்து நடித்தும் வந்தார் ராதிகா. சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிரேக் எடுக்காமல் நீண்டகாலமாக நடித்து வந்த பெருமையையும் பெற்றார்.
இந்த நிலையில், தற்போது நடித்துவரும் ” சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் ராதிகா. கணவர் சரத்குமாருடன் அரசியல் பணிகளில் உத்வேகத்துடன் பணியாற்ற இருப்பதால், சின்னத்திரையில் இருந்து தற்போது விலகியிருப்பதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
ராதிகா விலகியதைத் தொடர்ந்து, அவர் நடித்துவந்த கதாபாத்திரத்தில் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவயானி, சினேகா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரில் ஒருவர் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சுகள் உலவுகின்றன.