இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பேருக்கு கொரோனா பாதிப்பு 2,219 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 92,596 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 மாதங்களுக்கு பின் தொற்று எண்ணிக்கை 1 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 2,219 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,89,069 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.கொரோனா இறப்பு எண்ணிக்கை 2,219 ஆக கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,53,528 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 1,62,664 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,75,04,126 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12,31,415 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் இதுவரை 23,90,58,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.