திருகோணமலை,கிண்ணியா பிரதேசத்தில் டைனமட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து டைனமட் குச்சிகள் 37, டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படை பலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணல் நகர், கிண்ணியா 3ஐ சேர்ந்த ஆயுர்வேத வைத்தியரும் (44 வயது), ஜாவா நகர்,கிண்ணியா 6ஜ சேர்ந்த மீனவர் (41 வயது) ஒருவருமே கைதாகினர்.
கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் பயங்கரவாத செயற்பாட்டிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1