ட்விட்டரில் சாதனை படைத்த தனுஷ்!

Date:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ம்  நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. நேற்று இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது.

பாடல் வெளியீட்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ட்விட்டரில் ஸ்பேஸ்ஸில் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன், பாடகர் அறிவு, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடல் நடத்தினர். பிரபல நகைச்சுவையாளர் அலெக்ஸ்சாண்டர் பாபு தொகுத்து வழங்கினார்.

ட்விட்டரில் ஸ்பேஸ் என்றொரு அம்சம் கொண்ட வந்த பிறகு அதிக பேர் பங்குபெற்ற ட்விட்டர் ஸ்பேஸ் என்ற சாதனையையும் ஜகமே தந்திரம் படம் படைத்துள்ளது. அமெரிக்காவில் இருந்துகொண்டு பேசிய தனுஷ் ரசிகர்களுடன் பல சுவாரசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

தன்னுடைய நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாக்கம் அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஜகமே தந்திரம் படத்திலும் அதைக் காணலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு படம் இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பில் அதிகம் கற்றுக்கொண்டதாகவும், படப்பிடிப்பு நன்றாக இருந்ததாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் இத்தனை நாட்கள் இருந்து வேறு மொழி படத்தில் நடிக்க ரசிகர்கள் அளிக்கும் ஊக்கமே காரணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வன்முறை முறைப்பாடுகளை கையாள வடக்கு பொலிஸாருக்கு தமிழில் விசேட பயிற்சி

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான...

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்