25.9 C
Jaffna
December 27, 2024
Pagetamil
விளையாட்டு

இந்திய அணி எங்கள வச்சு செஞ்சிருச்சு: புலம்பும் ஆஸ்திரேலிய வீரர்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா பெற்ற வரலாற்று வெற்றி குறித்து உஸ்மான் கவாஜா மனவேதனையும் பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. முதல் மூன்று போட்டிகள் நடந்து முடிந்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தபோது, கடைசி போட்டி காபா மைதானத்தில் நடைபெற்றது.

காபா மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டை. அங்கு இந்திய அணி நிச்சயம் மண்ணை கவ்வும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்திருந்தார்கள். உண்மையில், இந்திய அணி காபாவில் ஒருமுறைகூட வெற்றிபெற்றது கிடையாது. மேலும், இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி போன்றவர்கள் இல்லாமல் இளம் வீரர்கள் மட்டுமே இருந்ததால், தோல்வி நிச்சயம் என்றுதான் நினைக்கத் தோன்றியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் குவித்தது. மார்னஸ் லபுஷேன் அதிகபட்சமாக 108 ரன்கள் அடித்திருந்தார். அடுத்துக் களமிறங்கிய இந்திய அணியும் கடுமையாக போராடி 336 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டெய்ல் என்டர்ஸ்

வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும், ஷர்தூல் தாகூர் 67 ரன்களும் விளாசினர்.

இதனால் இரண்டாவது இன்னிங்ஸ் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 294 ரன்கள் குவித்து மிரட்டியது. ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இது கடின இலக்கு, இந்திய அணி டிரா செய்யத்தான் முயற்சிக்கும் எனப் பலர் கருதினார்கள்.

ஆனால், இந்திய அணியோ இந்த ஸ்கோரை எப்படியாவது சேஸ் செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியது. துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்தியா, 7 விக்கெட்களை இழந்து இந்த வெற்றி இலக்கை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. ஷுப்மன் கிங் 92 ரன்களும், ரிஷப் பந்த் 89 ரன்களும் விளாசினர். காபாவில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அத்துடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி சாதனை படைத்திருந்தது.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, “4ஆவது இன்னிங்ஸில் எப்போதுமே காபா மைதானம் பந்துவீச்சுக்கு ஏற்றதுபோல் தான் இருக்கும். இதனால், இந்தியா தோற்றுவிடும் என்றுதான் நினைத்தோம். ஆனால், அவர்கள் இறுதிவரை நிதானமாக விளையாடி வெற்றிபெற்றார்கள். உண்மையில் இது பாராட்டக் கூடியது. இந்திய அணி ஆஸ்திரேலியாவை மனதளவில் வீழ்த்தியது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா அப்போட்டியில் வெற்றிபெற்றதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை” எனக் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

Leave a Comment