கல்முனை மாநகர சபையின் 35வது அமர்வு

Date:

கல்முனை மாநகர சபையின் 35ஆவது சபை அமர்வு முதல்வர் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் சபா மண்டபத்தில்  இன்று(24) மாலை இடம்பெற்றது.

இதன் போது சமய ஆராதனையுடன் கடந்த 2021.01.27 ஆந் திகதி கூட்டறிக்கையை உறுதிப்படுத்தல் முதல்வரின் உரை என்பன கிரமமாக இடம்பெற்றன.

தொடர்ந்து  கல்முனை மாநகர சபையினால் வழங்கப்படும் சேவைகளை பரிசீலனை செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என தேசிய காங்கிரஸ்  கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர்  தெரிவித்தார்.

இதற்கமைய கல்முனை மாநகர சபைக்கு சேவைபெறும் நிமிர்த்தம் வருகின்ற பொதுமக்களுக்கு அவர்களது தேவைகளை விரைவாகவும் நேர்த்தியாகவும் வழங்கவேண்டும் என்பதோடு  சேவைகள் அனைத்தும் முறையாக வழங்கப்படுகின்றதா என்பதை பரிசீலனை செய்வதற்கு உள்ளக நடைமுறை பரிசீலனை குழு ஒன்றினை ஸ்தாபித்து அக்குழுவின் னூடாக மாநகரசபையினால் வழங்கப்படும் சேவை சிக்கல்களை உடனே தீர்த்துவைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைய இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகர பொதுவசதிகள் குழு தவிசாளர்  உறுப்பினர்  ஹென்றி மகேந்திரன் மற்றும் சபை முதல்வர் ஆகியோர்  உறுதி வழங்கினர்.

மேலும் முதல்வரின்  ஒழுங்கமைப்பில் பொதுவசதிகள் மற்றும் நலன்புரிக்கூட்ட அறிக்கை அத்துடன் இதனை தொடர்ந்து ஏனைய  மாநகர சபை உறுப்பினர்களின் ஒழுங்கு பிரச்சினை மற்றும் முறையீடுகளிற்கான பதிலுடன் சபை அமர்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்