காயம்பட்ட கரப்பான்பூச்சியை டாக்டரிடம் கூட்டி வந்த இளைஞர்!

Date:

நம்மூரில் செல்லப்பிராணியாக நாய், பூனை, பறவை, மீன் என வளர்ப்பார்கள், சில நாடுகளில் பாம்பு, புலி, சிங்கம், ஓநாய் ஆகிவற்றை கூட செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதை கேள்விபட்டிருப்போம். ஆனால் பூச்சிகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? அதுவும் கரப்பான் பூச்சி யை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

தாய்லாந்து நாட்டனின் கர்தூம் பின் என்ற பகுதியில் கால் நடை மருத்துவராக இருந்து வருபவர் டாக்டர் தானு லிம்பாப்பானாவிஞ்ச், இவர் சமீபத்தில் பேஸ்புக்கில் போட்ட பதிவு தான் சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது. தனது தனது பதிவில் தன்னை ஒருவர் ஒரு கரப்பான் பூச்சியுடன் சந்திக்க வந்தார். அவர் அந்த கரப்பான் பூச்சியை செல்லப்பிராணியாக வளர்ப்பதாகவும், அதையாரோ தெரியாமல் மதித்து விட்டதாகவும், அதனால் அது உயிருக்கு போராடி வருவதாகவும், அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அவர் வெளியிட்ட பதிவில் இந்த நபர் யார் என தெரியவில்லை ஆனால் கருப்பு நிற டி சர்ட் அணிந்திருந்தார் எனவும், அவர் சாய் ராக் கால்நடை மருத்துவமனையில் தான் பணியில் இருந்த போது அந்த நபர் வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் இவரை அணுகிய போது அவர் கரப்பான் பூச்சிகளை பற்றி விளக்கி சொல்லி இதற்கு மருந்து இல்லை என சொல்லியுள்ளார். மேலும் இது போன்ற இதயம் படைத்த நபர்களை பார்ப்பது மிகவும் அரிது எனவும் இதை பார்த்து சிரிப்பதை விட இவர் எண்ணம் நமக்குஇல்லை என்பதை தான் நாம் நினைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தான் அவருக்கு ஆலோசனை வழங்கியதற்காக எந்த பணமும் வாங்கவில்லை எனவும் குறிப்பிட்டிந்தார். இந்த பதிவு பெரும் வைரலாக பரவி விட்டது. கரப்பான் பூச்சிக்கு இரக்கப்படும் ஒருவரை காண்பது மிகவும் அரிது என இதில் கருத்திட்டு அவரை பாராட்டி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

டிக்டொக் வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான மோட்டார் சைக்கிள் சாகசக்காரர்கள் நீதிமன்றில் ஆஜர்

சம்மாந்துறை நகரில் போக்குவரத்து விதிகளை மீறி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்...

மருதமுனையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதான வீதியில், பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில்...

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஷம்போ பக்கெட்டுகள்

கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5,386 ஷாம்போ பக்கெட்டுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்