வவுனியாவில் விதிமுறைகளை மீறிய 6 வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

வவுனியாவில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்ட 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் இன்று (06) சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு பூராகவும் முழுமையான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களது அத்தியாவசிய தேவைகளை பெறும் வகையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக சென்று வழங்குவதற்கு பிரதேச செயலங்கள் ஊடாக சில வர்த்தக நிலையங்களுக்கு பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதேச செயலகம் ஊடாக வீடு வீடாக பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி பெற்றுக் கொண்ட வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விசேட சோதனை நடத்திய சுகாதாரப் பிரிவினர் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்ட வர்த;தக நிலையங்கள் மற்றும் வீடு வீடாக பொருட்களை வழங்குவதற்கு வழங்காப்பட்ட பாஸ் அனுமதியை முறைகேடாக பயன்படுத்திய வர்த்த நிலையங்கள் என்பவற்றுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதை பொருட்படுததாமல் இன்றும் இயங்கிய வர்ததக நிலையங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்படி பலசரக்கு வியாபார நிலையம் நான்கு, பாண் விற்பனை நிலையம் ஒன்று, ஸ்ருடியோ ஒன்று என 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைத்து மூடப்பட்டதுடன், குறித்த வர்த்தக நிலையங்கள் 14 நாட்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

டிக்டொக் வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான மோட்டார் சைக்கிள் சாகசக்காரர்கள் நீதிமன்றில் ஆஜர்

சம்மாந்துறை நகரில் போக்குவரத்து விதிகளை மீறி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்...

மருதமுனையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதான வீதியில், பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில்...

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஷம்போ பக்கெட்டுகள்

கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5,386 ஷாம்போ பக்கெட்டுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்