நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயங்களில் மக்களை ஒன்று கூட்டாது ஆலய குருமார் நித்திய பூசை செய்வதற்கு அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் நித்திய பூசை செய்ய புதுக்குடியிருப்பு பொலிசார் தடைவிதித்துள்ளனர்.
கடந்த 03ஆம் திகதி மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்திற்கு சென்ற பொலிசார் ஆலயத்தில் நின்ற இரண்டு குருமாரையும் ஆலய அறங்காவலர் ஒருவரையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்று சுமார் 4 மணித்தியாலங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அனுப்பியுள்ளனர்.
“எந்த தவறுமின்றி திட்டமிட்டவகையில் வேற்று மதத்தவரின் தூண்டுதலில் பொலிசார் எந்த முறைப்பாடுமின்றி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்று சுமார் 4 மணித்தியாலங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்இ அதனை விட நித்திய பூசை செய்யக்கூடாது என மிரட்டி தடுத்துள்ளனர். இந்தவிடயத்தை இந்துகுருமார் ஒன்றியம் பிரதமர் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக நல்ல தீர்வினை பெற்றுத்தர வேண்டும்“ என ஆலய பிரதம குரு கோரிக்கை விடுத்துள்ளார்.