முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் மரக்காலை ஒன்றில் காவலாளியாக கடமையாற்றி வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தை சேர்ந்த 54 வயதுடைய இராமையா மகாதேவன் என்பவர் மரக்காலை ஒன்றில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை உயிரிழந்த நிலையில் இன்று காலை காணப்பட்டுள்ளார்
காவலாளியின் உயிரிழப்பு தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்த காவலாளி தொடர்பான பிரேத பரிசோதனைக்காக சடலம் மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த மரக்காலையில் உள்ள சி சி ரி வி காணொளி மூலம் குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்காக சடலம் மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை பி சி ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உயிரிழப்பு தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




