25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

மீன்களை காணோம்; குளத்தை குத்தகைக்கு எடுத்தவருக்கு அதிர்ச்சி: மன்னாரில் நடப்பதென்ன?

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள கமக்கார அமைப்பிற்கு சொந்தமான குளம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள தனி நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குளத்தில் இராணுவம் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று திங்கட்கிழமை (31) மதியம் குறித்த பகுதிக்குச் சென்று நேரடியாக சம்பவத்தை அவதானித்தார்.

திருக்கேதீஸ்வர கமக்கார அமைப்பிற்கு சொந்தமான குறித்த குளத்தை கமக்கார அமைப்பு கமநல கேந்திர நிலையத்துடன் இணைந்து திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மீன் பிடிப்பதற்கு மூன்று மாத கால குத்தகை அடிப்படையில் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்று மீன் பிடிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

எனினும் இராணுவத்தினர் எவ்வித அனுமதியும் இன்றி இரவு பகல் பாராது குறித்த குளத்தில் தொடர்ச்சியாக மீன் பிடித்து வந்துள்ளனர்.

இதனால் குத்தகைக்கு குளத்தை பெற்ற நபர் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் உரிய அமைப்பினர் இராணுவ அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் திருக்கேதீஸ்வர கமக்கார அமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட நபர் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று (31) திங்கட்கிழமை மதியம் குறித்த பகுதிக்கு திடீர் விஜயம் செய்து பார்வையிட்டார்.இதன் போது இராணுவத்தினர் சிவில் உடையில் மீன் பிடித்துக் கொண்டு இருப்பதை நேரடியாக அவதானித்தார்.

இது தொடர்பாக இராணுவ உயர் அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினார்.

இதன் போது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக இராணுவ அதிகாரி பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.

உரிய தீர்வு கிடைக்காது விட்டால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராணுவ அதிகாரியிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

Leave a Comment