பயணத்தடை நடைமுறையில் இருந்த போது, அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் ஒன்று நேற்று இரவு இங்கினியாகலவில் உள்ள நமல் ஓயா பகுதியில் பொலிசாரால் வழிமறிக்கப்பட்டு, அதிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அனைவரும் இன்று அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.



