Pagetamil
இந்தியா சினிமா

ஓஎன்வி விருதை திருப்பி கொடுத்தார் வைரமுத்து : ‘எனது உண்மையை யாரும் உரசிப்பார்க்கத் தேவையில்லை’ எனவும் கருத்து!

மலையாள நடிகைகளின் கடும் எதிர்ப்பினால் கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

சிறந்த மலையாள கவிஞரும், பாடலாசிரியருமான ஓ.என்.வி.குறுப் அவர்களின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கேரளாவில் சிறந்த இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. மலையாள கவிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது முதல்முறையாக, ஒரு தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள என் காதலா என்னும் பாடலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கவிஞர் வைரமுத்துவிற்கு கேரளாவின் மிக உயரிய விருதான ஓஎன்வி இலக்கிய விருது வழங்கப்பட்டதற்கு மலையாள நடிகை பார்வதி உள்பட பல்வேறு நடிகைகள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, ஒரு பாலியல் வன்கொடுமை புகாருக்குள்ளானவருக்கு ஓஎன்வி விருது வழங்குவதா..? என்றும் அவரது பெயரில் இவருக்கு விருது வழங்கி மரியாதை செலுத்தினால், அது மிகுந்த அவமரியாதையாகும் எனவும் கூறினர்.

மலையாள திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கவிஞர் அதனை திரும்பப் பெறுவது தொடர்பாக ஓஎன்வி கலாச்சார அகாடமி பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே விருது மறுபரிசீலனை செய்ய முக்கியக் காரணம். எனது உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. எனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள நிவாரண நிதிக்கு கொடுங்கள். மேலும், எனது தனிப்பட்ட பங்காக ரூ.2 லட்சமும் வழங்குகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

Leave a Comment