25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
சினிமா

100 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த சிம்புவின் பாடல் ! படம் சுமார்தான், ஆனா பாட்டு சக்கபோடு போடுது !(வீடியோ இணைப்பு)

இந்த 2021-ஆம் வருடம் யாருக்கு நல்லபடியாக அமைந்ததோ இல்லையோ சிம்புவிற்கும் சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஒருபக்கம் ஈஸ்வரன் தோல்வியடைந்தாலும் படம் வெளிவந்ததே வெற்றியாகக் பார்க்கும் சிம்பு ரசிகர்களும், மறுபக்கம் அடுத்தடுத்து சிம்பு நடிக்கும் படங்களை பற்றி அப்டேட்களை வாரி குவிக்கும் சிம்புவை பார்க்கும் மற்ற ரசிகர்களுக்கு பொறாமையாகவே உள்ளது.

சில வருடங்களுக்கு முன், சிம்பு குண்டாக இருந்ததால் அவரின் ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம், சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் ‘ பத்து தல ‘ கௌதம் மேனன் இயக்கத்தில்” நதிகளிலே நீராடும் சூரியன்” என மற்றொரு படம்னு அதகளம் செய்து கொண்டிருக்கிறார். இந்த வருடம் சிம்புவுக்கு 3 படங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என இண்டஸ்ட்ரியில் ஒரு தகவல் நிலவ, தற்போது இருக்கும் மக்களின் நிலைமையை பார்த்தால், அதற்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தில் தமன் இசை அமைத்து சூப்பர் டூப்பர் ஹிட்டான மாங்கல்யம் என்னும் பாடல் யூ டியூபில் 10 கோடி பேர் பார்த்துள்ளனர். இதுவரை ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் அவர்களின் பட பாடல்கள் மட்டுமே 10 கோடி பேர் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. சிம்புவிற்கு இது முதல் முறை என்பதால் ரசிகர்கள் டிவிட்டரில் 100MviewsforMangalyam என்று ட்ரெண்ட் செய்து இதை ஆரவாரமாக கொண்டாடி வருகிறார்கள்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Pagetamil

ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Pagetamil

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

Leave a Comment