கொரோனா 2ம் அலையில் 513 மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன் நின்று பணியாற்றும் மருத்துவர்களும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், பொதுமக்களும், முன்கள பணியாளர்களும் இந்த பெருந்தொற்றுக்கு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவத்தொடங்கியதில் இருந்து இதுவரை 513 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக டெல்லியில் மட்டும் 103 மருத்துவர்கள், பீகாரில் 96 மருத்துவர்கள், உத்தர பிரதேசத்தில் 41 மருத்துவர்கள், அசாமில் 6 மருத்துவர்கள், தமிழ்நாட்டில் 18 மருத்துவர்கள், கேரளாவில் 4 மருத்துவர்கள், மராட்டியத்தில் 15 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.