6மாதங்களை கடந்த வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம்: நாடு முழுவதும் இன்று கறுப்பு தினமாக கடைபிடிக்கும் விவசாயிகள்!

Date:

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடங்கிய போராட்டம் இன்றோடு ஆறு மாதங்களை எட்டியுள்ளது. இதனையடுத்து, இன்று நாடு முழுவதும் விவசாயிகள் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர்.

மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்த 3 வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் கடந்த நவம்பர் 26ம் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, இன்று கறுப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.விவசாயிகளின் போராட்ட அழைப்புக்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி உள்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

ஒக்டோபர் 17ஆம் திகதி வழக்கு விசாரணையின் பின்னரே பூரண நிம்மதி கிடைக்கும் என அனோஜனின் சகோதரன்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்