வடமாகாணத்தை சேர்ந்த 50 பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 41 பேர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 436 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், பளை சுகாதார வைத்திய அதிகார பிரிவில் ஒருவர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர், சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவர், மானிப்பாய் ஆதார வைத்தியசாலையில் 10 பேர், காரைநகர் ஆதார வைத்தியசாலையில் 7 பேர், யாழ் போதனா வைத்தியசாலையில் 2 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 2 பேர்,
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 3 பேர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 2 பேர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.




