யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்களின் மற்றும் நோயாளிகளின் தொலைபேசிகளை திருடிவந்த கும்பல் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர்.
இன்று காலையில் தொலைபேசி திருடுவதற்கென தனது மோட்டார் சைக்கிளை வெளியில் விட்டு நுழைவாயினுள் வந்த திருடன் அங்கு வழமையாக திருட்டுகென ஆயத்தபடுத்தி கெண்டுள்ள நேரம் தகவல் அறிந்து யாழ்மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் அவரது குழுவினரும் மற்றும் வைத்தியசாலை காவளாளியின் உதவியுடன் அவரை பிடிக்க முற்பட்டனர். அவர்களிடமிருந்து தப்பியோட முற்பட்ட திருடன், மடக்கி பிடிக்கப்பட்டான்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவரிடம் விலைகுறைந்த விலையில் தொலைபேசியை வாங்குபவர்களை இணுவில் துரை வீதியிலும் மற்றும் தாவடியிலும் கைது செய்து அவர்களிடம் இருந்து 7தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர் .
சந்தேக நபர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தபடுவார்கள் என பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.




