வவுனியா நெளுக்குளம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளினை விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்தவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (21) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த வீட்டிலிருந்து விற்பனைக்காக போதைப்பொருளை சிறு சிறு அளவிலான பொதிகளாக பொதி செய்து வைக்கப்பட்ட கஞ்சாவினை கையகப்படுத்தியதுடன் விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 32 வயதுடைய குடும்ப பெண்ணை வீட்டில் வைத்து கைது
செய்ததோடு குறித்த பெண்ணின் கணவரையும் கைது செய்துள்ளனர்.
ஹெரோயின் போதை பொருளினை குறித்த பெண் விற்பனை செய்ய முயன்ற வேளை குறித்த பெண்ணின் கணவன் இல்லாத காரணத்தால் கணவனை பொலிசார் விடுதலை செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து 7 கிராம் பொதி செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை மீட்ட பொலிசார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.