25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இந்தியா சின்னத்திரை

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதியுதவி வழங்கிய பிரபல சக்தி மசாலா நிறுவனம்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரபல சக்தி மசாலா நிறுவனம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியது

இது குறித்து சக்திமசாலா நிறுவனம்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில்‌ கூறியிருப்பதாவது :- ஈரோட்டில்‌ உள்ள சக்தி மசாலா நிறுவனம்‌ பல்வேறு சமூக பணிகளில்‌ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கொரோனா முதல்‌ அலை வந்த கடந்த ஆண்டும், பல்வேறு நிவாரணப்பணிகளில்‌ முழு மூச்சுடன்‌ செயல்பட்டார்கள்‌. இந்த ஆண்டும்‌ சக்தி மசாலா நிறுவனம்‌ பல்வேறு கொரோனா நிவரண பணிகளில்‌ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில்‌ கொரோனா பேரிடர்‌ எதிர்கொள்ள நிவாரண நிதியாக அனைவரும்‌ பங்களிப்பு செய்ய வேண்டும்‌ என ஊடகங்கள்‌ வாயிலாக முதல்வர்‌ ஸ்டாலின்‌, கேட்டுக்கொண்டுள்ளார்‌. அதன்படி, சக்தி மசாலா நிறுவனம்‌ சார்பில்‌ ரூ.5 கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர்‌ நிவாரண நிதிக்கு மே.15 -ஆம்‌ தேதி வங்கி மூலம்‌ அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து முதல்வருக்கும்‌ கடிதம்‌ அனுப்பி உள்ளார்கள்‌.

தமிழக முதல்வர்‌ ஸ்டாலின்‌ தலைமையின்‌ கீழ்‌ அமைச்சர்கள்‌, சட்டப்பேரவை உறுப்பினர்கள்‌, சுகாதாரம்‌, வருவாய்‌ துறை, காவல்துறை, உணவு வழங்கல்‌ துறை, தொழிலாளர்‌ நலத்துறை, தீயணைப்பு துறை, மாநில பேரிடர்‌ மேலாண்மை துறை, உள்ளாட்சி துறை, அனைத்து மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ அனைத்து துறை அதிகாரிகள்‌, களப்பணியாற்றி வரும்‌ பணியாளர்கள்‌, மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌, சுகாதாரப்‌ பணியாளர்கள்‌, காவலர்கள்‌, ஊர்க்காவல்‌ படையினர்‌, முன்னாள்‌ ராணுவத்தினர்‌, தன்னார்வலர்கள்‌,தொண்டு நிறுவனங்கள்‌ போன்ற அனைவரும்‌ ஒன்றிணைந்து கரோனா தொற்று பரவல்‌ தடுப்பு பணிகளில்‌ போர்க்கால அடிப்படையில்‌ இரவு, பகலாக ஓய்வின்றி சிறப்பாக பணிபுரிந்து வருவதை சக்தி மசாலா நிறுவனம்‌ சார்பில்‌ வணக்கத்தையும்‌, பாராட்டும்‌, நன்றியும்‌ தெரிவித்து கொள்கிறோம்‌.

கூடிய விரைவில்‌ கொரோனா வைரஸ்‌ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு பொது மக்கள்‌ அனைவரும்‌ நலமுடன்‌ வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறது சக்தி மசாலா நிறுவனம்‌, என நிர்வாக இயக்குநர்கள்‌ பி.சி துரைசாமி, சாந்தி துரைசாமி தெரிவித்துள்ளனர்‌.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment