வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில் இருந்த யானையினை காக்கும் நோக்கோடு வவுனியா பௌத்த துறவிகளால் பிரித்தோதல் இடம்பெற்றுள்ளது.
வவுனியா – புளியங்குளம் – புதூர் காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் குறித்த பகுதியிலுள்ள காட்டில் உயிருக்கு போராடிய நிலையில் இருக்கின்றது.
12 வயது மதிக்கத்தக்க குறித்த யானைக்கு இராணுவத்தினர், வனவிலங்கு துறையினர், கிராம மக்களின் உதவியுடன் வனவிலங்கு துறையின் வடக்கு மாகாண கால்நடை வைத்தியர் கிரிதரன் சிகிச்சை அளித்து வருகிறார்.
இந்நிலையில் காயமடைந்த குறித்த யானை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஆபத்தான நிலையில் அதனை காப்பற்றும் நோக்கோடு இன்றைய தினம் பௌத்த துறவிகளினால் பிரித்தோதல் வழிபாடும் குறித்த இடத்தில் இடம்பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1