வாகனம் ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்தமை தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மொத்தம் 130,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஆறு மாத கால சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) வழங்கியது.
முதலாவது குற்றச்சாட்டுக்காக, 5,000 ரூபா அபராதமும், அதனைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இரண்டாவது குற்றச்சாட்டுக்காக, பெர்னாண்டோவுக்கு 100,000 ரூபா அபராதமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
மூன்றாவது குற்றச்சாட்டுக்காக, 25,000 ரூபா அபராதமும், அதனைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.




