25.1 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இந்தியா

சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்று; உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கான கரணங்களை உலக சுகாதார அமைப்பு விளக்கியுள்ளது

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையின் தீவிரத்துக்கு பி.1. 617 என்ற இரட்டை உருமாற்ற வைரஸ்தான் (டபுள் மியூட்டேஷன் – double mutation) காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் வைரஸ் உருமாற்றங்கள் இ484க்யூ, எல்484கே, எல்452ஆர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் எல்452ஆர் வகை வைரஸ்கள் மனிதர்களை தாக்கினால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடும் தன்மை கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், ஒரிஜினல் வைரசை விடவும் எளிதாக பரவும் தன்மை கொண்டது எனவும், மனித உடலில் தடுப்பூசி உருவாக்கும் எதிர்ப்பு சக்திகளுடனும் இவை போராடக்கூடியவை என்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மரபணு பிறழ்வுகளில் சில புதிய திரிபுகள் உருவாகியிருந்தாலும், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பிரிட்டன் வேரியண்ட்களும், இந்தியவை பொறுத்தவரை மகாராஷ்டிரா வேரியண்ட்டும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதம் பேர் கடந்த ஏப்ரல் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பி.1. 617 என்ற உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

“தென்கிழக்கு ஆசியாவின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் உயிரிழப்பில் இந்தியாவில் மட்டும் 93 சதவீதம் பதிவாகி உள்ளது. சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்றும், சர்வதேச உயிரிழப்பில் இந்தியாவில் 30 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது” என்றும் உலக சுகாதார அமைப்பு பகீர் தகவலை தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

Leave a Comment