முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

Date:

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில் அங்​குள்ள கல்​லூரி​யில் படித்​த​போது, உடன் படித்த பெண்ணை காதலித்​த​தாக கூறப்​படு​கிறது. சந்​தோஷின் நடத்தை காரண​மாக அந்த பெண் அவரிட​மிருந்து விலகி சென்​றுள்​ளார். இருப்​பினும், செல்​போன், கடிதம் மூலம் சந்​தோஷ் தொந்​தரவு செய்து வந்​ததால், அந்த பெண் தற்​கொலைக்கு முயற்​சித்​துள்​ள​தாகவும் தெரி​கிறது.

இந்​நிலை​யில், தன்​னுடைய முன்​னாள் காதலி தற்​போது யாரை காதலிக்​கிறார்? இதற்கு முன் எத்​தனை பேரை காதலித்​துள்​ளார்? அவருக்கு திரு​மணம் ஆகி​விட்​டதா? அவர் உயிரோடு இருக்​கிறாரா? என்​பன உள்​ளிட்ட 1,886 கேள்​வி​களை எழுப்பி கடலூர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில் உள்ள, பொது தகவல் அதி​காரிக்கு தகவல் அறியும் உரிமை சட்​டத்​தின் கீழ் 97 விண்​ணப்​பங்​களை சந்​தோஷ் அனுப்​பியுள்​ளார்.

இந்த தகவல்​களை வழங்​க​வில்லை என கடலூர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாள​ருக்கு எதிராக சந்​தோஷ், மாநில தகவல் ஆணை​யத்​தில் மேல்​முறையீடு செய்​தார். இந்த மனுவை விசா​ரித்த ஆணை​யர் வி.பி.ஆர்.இளம்​பரிதி, “தகவல் அறியும் உரிமை சட்​டத்​தின் நோக்​கத்தை சிதைக்​கும் வித​மாகவும், அரசு ஊழியர்​களுக்கு தேவையற்ற பணிச்​சுமையை ஏற்​படுத்​தக்​கூடும் வகை​யிலும், எந்​த பொதுநலனும் இல்​லாமல் மனுதா​ரர் செயல்​பட்​டுள்​ளார்.

ஊழல்​களை​யும், முறைகேடுகளை​யும் வெளிக்​கொண்டு வரு​வதற்​காக உரு​வாக்​கப்​பட்ட சட்​டத்தை, தனது தனிப்​பட்ட காதலில் ஏற்​பட்ட விரக்​திக்​காக தவறாக பயன்​படுத்​தி​யிருப்​பது வன்​மையாக கண்​டிக்​கத்​தக்​கது. இதுபோன்று முறையற்ற மனுக்​களை தாக்​கல் செய்து அரசுக்கு இடையூறு ஏற்​படுத்​தினால், அவர் ஆர்​டிஐயில் மனு தாக்​கல் செய்ய ஓராண்டு காலம் தடை விதிக்​கப்​படும்” என்று எச்​சரித்து, சந்​தோஷுக்கு மனநல ஆலோ​சனை வழங்க மாவட்ட சுகாதா​ரத்​துறைக்கு உத்​தர​விட்​டார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்