அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 9 பேருடன் பயணித்த தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
நவம்பர் 1ஆம் திகதி Greenacres பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், டெக்சாஸ் மாநிலத்திலிருந்து பஹாமாஸ் நோக்கிப் பயணித்த Learjet 60 ரக விமானமே விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பனிக்கட்டிகள் படிவதாகவும், கடுமையான காற்றுக் கொந்தளிப்பு நிலவுவதாகவும் விமானிகள் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விமானம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகத் தரையை நோக்கி வீழ்ந்துள்ளது.
இந்நிலையில், விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் விமானத்தின் வால் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் விமானம் தரையில் மோதுவதற்கு முன்பே வானில் உடைந்து சிதறியிருக்கலாம் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.




