27.4 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

யாழில் கொரோனா என அடித்துச் சொன்னவர்; நம்ப மறுத்த வைத்தியர்கள்: குடும்பத்திற்கே தொற்று!

நயினாதீவு ஆலய பணியாளரின் குடும்பத்தில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.

நேற்று இரவு வெளியான பிசிஆர் முடிவின்படி, அவர்களிற்கு தொற்று உறுதியானது.

நயினாதீவு நாகபூசணியம்மன் ஆலய பணியாளர் ஒருவர் சில தினங்களிற்கு முன்னர் கொரோனா தொற்றிற்கு ஆளானார்.

அவரிற்கு அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பிரதேச வைத்தியசாலையொன்றிற்கு பிசிஆர் பரிசோதனைக்கு சென்றிருந்தார். எனினும், அவரிற்கு தொற்று வாய்ப்பில்லையென கூறி வைத்தியசாலையில் பிசிஆர் சோதனை நடத்தப்படவில்லை.

மீண்டும் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து இரண்டாவது முறையும் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கவில்லை. அவரிடம் தொற்றிற்கான அறிகுறி தென்படவில்லையென வைத்தியசாலையில் கூறப்பட்டிருந்தது.

அடுத்த சில நாட்களில் அவருக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டு, நள்ளிரவில் பிறிதொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில தொற்று உறுதியானது.

அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் மனைவி, பிள்ளைகள் என குடும்பத்தில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா அபாயம் ஏற்பட்ட பின்னரும் வெளியிடங்களிலிருந்து நயினாதீவிற்கு வருபவர்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. கொரோனா அபாயமிக்க தெற்கு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து சென்றனர். எனினும், வடக்கு சுகாதார திணைக்களம் அதை கண்டு கொள்ளவில்லை.

ஏனைய சில தீவுப்பகுதிகளில் வெளியார் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், நயினாதீவு திறந்து விடப்பட்டதால் அபாய நிலை உருவாகியுள்ளது.

தொற்றிற்குள்ளானவர்கள் படகு பயணம் உள்ளிட்ட பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மது போதையில் வந்த பொலிஸாசாரால் விபத்து

east tamil

மஹிந்தவுக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்படலாம்!

Pagetamil

யோஷித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றத்தில்

Pagetamil

கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அவதி

east tamil

யாழ் பல்கலைக்குள் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்… இரவில் தொங்கும் பெண்களின் உள்ளாடைகள்- கலைப்பீடாதிபதி பதவிவிலகலுக்கு இதுதான் காரணமா?

Pagetamil

Leave a Comment