ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் டயலாக் ஆக்சியாட்டா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னிலையில், நேற்று வியாழக்கிழமை 22 (ஆழரு) கையெழுத்திட்டனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், சர்வதேச ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இலங்கைத் தொழில் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் நோக்கில், ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுகிறது.
இந்தப் பங்களிப்பு, புத்தாக்கம் மற்றும் அடைகாத்தல், பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக ஆய்வகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட தீர்வுகள், தொழில் திறன்கள் மற்றும் திறமை மேம்பாடு, மற்றும் சர்வதேச அறிவுப் பகிர்வு ஆகிய ஐந்து முக்கியப் பகுதிகளை ஆராயும்.
ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷனின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் எம். ஜே. சங்கர் ராமன் அவர்களும், டயலாக் ஆக்சியாட்டா பிஎல்சி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான திரு. சுபுன் வீரசிங்க அவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன் போது இந்திய உயர்ஸ்தானிகர், டயலாக் ஆக்சியாட்டாவின் சிரேஷ்ட தலைவர்களுடன் தொழில்நுட்பம், வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் நம்பகமான கூட்டாண்மை குறித்து கலந்துரையாடிய போது அவர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தார்.




