ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சருக்கும், கிழக்கு ஆளுநருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கோரிக்கை !

Date:

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தனது முகநூலில் முஸ்லிம் சமூகத்தைப் புண்படுத்தின்ற விதத்தில் வெளியிட்ட கருத்தானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என உள்ளூராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும்,
ஏறாவூர் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வருண சம்பத் வண்டார அவர்கள் தனது முகநூலில் ஏறாவூரில் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக அழைக்க ஒலிக்கப்படுகின்ற பாங்கு சம்பந்தமாகவும், முஸ்லிம்களின் பெண்களின் உடலை மறைக்கும் ஹிஜாப் உடை சம்மந்தமாகவும் மோசமான வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து முஸ்லிம் சமூகத்தை காயப்படுத்துகின்ற கருத்தினை பொதுவெளியில் வெளியிட்டுள்ளார்.
இவருடைய இந்த கருத்தானது இன்று ஏறாவூர் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. அண்மையில் கூட அக்குரணையைச் சேர்ந்த டாக்டர் துஷார எச். குலதுங்கேவும் விபத்தில் உயிரிழந்த முஸ்லிங்கள் விடயத்தில் முஸ்லிம்களைப் புண்படுத்துகின்ற விதத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தொடர்ச்சியாக இப்படியான கருத்துக்கள் வருவது இன நல்லுறவுக்கு ஆரோக்கியமானதில்லை. எனவே, ஏறாவூர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற ஒரு பிரதேசத்தின் வைத்திய பொறுப்பாளராக இருந்து கொண்டு இப்படி கூறியிருப்பது, அந்த வைத்தியசாலையை நம்பி சிகிச்சை பெறுகின்ற மக்களின் மனநிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இப்படியான வைத்திய அதிகாரியின் கருத்துக்கள் இலங்கை மருத்துவ சபையின் அடிப்படை கோட்பாட்டுக்கு விரோதமானதும், அதேநேரம் இலங்கையில் இனவன்முறையை தூண்டுகின்ற வகையில் அமைந்துள்ளதாலும் இலங்கை சட்ட திட்டங்களுக்கும் முரணான நடவடிக்கையாக இருப்பதனாலும் இது சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் குறிப்பாக சுகாதார அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சின் செயலாளர் போன்றவர்கள் உடனடியாக தலையிட்டு உரிய ஒழுக்காற்று விசாரணையை எடுக்க முன்வரவேண்டும்
இப்படியான ஒருவர் அங்கு தொடர்ந்து கடமையாற்றுவதை மக்கள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எனவே ஏறாவூர் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வருண சம்பத் வண்டார அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கையை சுகாதார அமைச்சர் வேகமாக எடுப்பார் என்ற நம்பிக்கையை எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி! தலைமுடி அறுக்கப்பட்டு, கண் பார்வை பாதிக்கும் அளவுக்கு ஆசிரியை மீது தாக்குதல்!

யாழ் நல்லுார்ப் பகுதியில் குடு்ம்பப் பெண் ஒருவர் தலைமுடிகள் அறுக்கப்பட்டு, கடுமையான...

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளை உள்ளடக்கி, அனர்த்த...

இந்திய அரசின் நிதியுதவியுடன் காலியில் அமைக்கப்பட்ட 22-வது மாதிரி கிராமம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு–

இந்திய அரசின் நிதியுதவியுடன்  காலி மாவட்டத்தில் 'திடுலா'  (Didula)   மாதிரி கிராமத்தில்  நிர்மானிக்கப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்