ஒக்டோபர் 17ஆம் திகதி வழக்கு விசாரணையின் பின்னரே பூரண நிம்மதி கிடைக்கும் என அனோஜனின் சகோதரன்

Date:

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த கல்முனை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தொலைபேசி ஊடாகத் தமக்கு அறிவித்துள்ளதாக அனோஜனின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள வழக்கு விசாரணையின் பின்னரே எமக்கு முழுமையான நிம்மதி கிடைக்குமா இல்லையா என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவுதி அரேபிய நீதிமன்றினால் அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்துக் குடும்பத்தினரின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜனின் இல்லத்திற்கு விஜயம் செய்தபோதே அவரது சகோதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்று அனோஜனின் தாயார், தந்தையார், சகோதரர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் அனைவரும் நற்பிட்டிமுனையில் உள்ள தமது வீட்டில் கூடியிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அனோஜனின் சகோதரன் மேலும் தெரிவிக்கையில்:

“எனது அண்ணனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ள விடயம் குறித்துப் பிரதி வெளிநாட்டு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்கள் தொலைபேசி மூலம் எம்மைத் தொடர்பு கொண்டு நேரில் தெரிவித்தார். இது எமக்கு ஓரளவு ஆறுதலைத் தந்த போதிலும், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி அண்ணனின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அந்த வழக்கு விசாரணையின் முடிவுகள் வெளிவந்த பின்னரே எமது குடும்பத்திற்குப் பூரண நிம்மதி கிடைக்குமா என்பது தெரியவரும்” எனத் தெரிவித்தார்.

அனோஜனின் விடுதலைக்காகவும் உயிரைக் காப்பதற்காகவும் இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்குக் குடும்பத்தினர் தமது நன்றிகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்