களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

Date:

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் வாழைச்சேனை பகுதியில் வைத்து கைது செய்து, இன்று (10.10.2026) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வாழைச்சேனை பிரதேச விசேட அதிரடிப் படையினருக்குக் நேற்று இரவு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இரவு 10 மணியளவில் கதுருவெலவில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்தை வழிமறித்து சோதனையிட்டபோது, அதில் பயணித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 09.10.2026 அன்று களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலக்கான வர்த்தகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று மாலை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, குறித்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்காக களுத்துறை பிரதேச பொலிஸாரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

மெட்ரோ பேருந்துகளை சேதப்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'மெட்ரோ' (Metro)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்