இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

Date:

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற இலங்கை பழைய மாணவர்கள் அமைப்பின் அங்குரார்ப்பணக் கூட்டம் நேற்று 8ஆம் திகதி, வியாழக்கிழமை, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலின் கிராண்ட் கிரிஸ்டல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் (Indian Technical and Economic Cooperation – ITEC) கீழ் புலமைப்பரிசில் பெற்று இந்தியாவில் பயிற்சிகளில் பங்கேற்ற நாடெங்கிலுமுள்ள இலங்கையின் அரச, மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொழில்சார் தொடர்புகளை மேம்படுத்துதல், அறிவுப் பகிர்வு மற்றும் திறன் விருத்தியை ஊக்குவித்தல், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியன இவ் அமைப்பின் முக்கிய நோக்கங்களாகும். அத்துடன், ITEC திட்டத்தின் எதிர்கால இலங்கைப் பயனாளர்களுக்கு வழிகாட்டுவதற்கும் இந்த அமைப்பு தன் பங்களிப்பை வழங்கும். அங்குரார்ப்பணக் கூட்டத்தில் அமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகளை வழிநடத்துவதற்கான நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டது. தலைவர், உப தலைவர்கள், பொதுச் செயலாளர், உப செயலாளர், பொருளாளர், உப பொருளாளர் மற்றும் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் துறைசார் நிபுணத்துவ நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்த அமைப்பின் உருவாக்கம், ITEC பழைய மாணவர்களுக்கிடையிலான தொழில்சார் உறவுகளை வலுப்படுத்துவதுடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்