மீண்டும் சிறை திரும்பினார் ஞானசாரர்

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு வருட சிறைத்தண்டனையை இன்று (05) முதல் நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறைச்சாலை அதிகாரிகள் ஞானசார தேரரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

சட்டமா அதிபரின் கோரிக்கையை ஏற்று, நீதிபதிகள் மாயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரி, சட்டமா அதிபர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

‘ஜெயிலர் 2’ ட்ரெய்லர் எப்படி? – முத்துவேல் பாண்டியனின் அதகளம்

ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி...

மேடையில் பிடுங்குப்பட்ட தற்குறிகள்!

திருச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றும்போது புரோட்டோக்கால் பின்பற்றாமல்...

திடீர் எரிபொருள் வரிசைக்கான காரணம் இதுதான்!

எரிபொருள் விநியோகத்தில் எந்தவிதத் தட்டுப்பாடோ அல்லது இடையூறோ இல்லை என்று உறுதியளித்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்