திலீபன் சிலை அகற்றல்: தமிழரசு கட்சியே பொறுப்பு- கஜேந்திரன் காட்டம்!

Date:

யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனி சிலையை அகற்றிய இந்த செயற்பாட்டிற்கு தமிழரசு கட்சி பொறுப்பேற்க வேண்டும் தமிழரசு கட்சியும் அனுரா அரசும் சேர்ந்து தான் இந்த கூட்டு நாடகத்தை ஆடியிருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.

நல்லூர் திலீபன் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அவரது சிலையை பொலிசார் அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளர் எஸ்.கஜேந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்

கடந்த 18ம் திகதி திலீபனின் நினைவேந்தலுக்காக நல்லூரில் உள்ள திலீபன் நினைவேந்தல் பூங்காவில் ஒலி பெருக்கிக்கான அனுமதியை பெற யாழ் மாநகரசபை மேஜரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பு கொண்டபோது அவர் கட்சி தலைமை தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்று தெரிவிப்பதாக தெரிவித்தார்

இதையடுத்து நான் சீ.வீ.கே. சிவஞானம் உடன் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் என்னிடம் மிக காட்டமாக கேட்டார் நீங்கள் யாரை கேட்டு இந்த சிலை வைக்கின்றீர்கள், 26 ம் திகதி யோடு இந்த சிலை அகற்றப்படவில்லை என்றால் நான் இந்த சிலையை எடுப்பேன் என என்னிடம் தெரிவித்தார்.

நான் எதிர்பாக்கவில்லை இவர் இவ்வளவு கீழ்த்தரமாக செய்வார் என்று. எனவே இவர் நிச்சயமாக பொலிசாரை ஏவி பொலிசாரின் கைக்கூலிகளாக தமிழரசு கட்சி செயற்பட்டிருக்கின்றது என்பதுடன் தமிழரசு கட்சியும் அனுரா அரசும் சேர்ந்து தான் இந்த கூட்டு நாடகத்தை ஆடியிருக்கிறார்கள். இந்த சம்பவத்துக்கு பின்னால் சீ.வீ.கே.சிவஞானம் இருக்கின்றார் என்ற வலுவான குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம் அத்துடன் இந்த செயற்பாட்டிற்கு தமிழரசு கட்சி பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்

spot_imgspot_img

More like this
Related

தியாகி திலீபன் சிலை அகற்றல்: வடக்கு, கிழக்கில் நாளை எதிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தின் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்