4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை

Date:

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாகக் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வழமை போல் வேலைக்குச் சென்ற நிலையிலேயே இவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவரைப் பற்றி இதுவரை எவ்விதத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், அவரது மனைவியும் பிள்ளைகளும் சோகத்தில் மூழ்கியுள்ளதுடன் இவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காணாமல் போயுள்ள அமீர் அலி பாரிஸ் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் அல்லது இவரை எவரேனும் கண்டால், உடனடியாகச் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின்
+94 67 226 0222 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு குடும்பத்தினரும் பொலிஸாரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வீடொன்றில் நள்ளிரவில் தீப்பரவல்: மோட்டார் சைக்கிளும் சேதம்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளிப் பகுதியில் அமைந்துள்ள...

அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த...

நீதிமன்றத்தில் வெளியான சுரேஸ் சல்லேவின் மருத்துவ அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்