மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஏ. அஸ்தர் கடமையேற்பு

Date:

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய அதிபர் சேவையைச் சேர்ந்த எம்.ஏ. அஸ்தர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, புதிய அதிபர் எம்.ஏ. அஸ்தர் (10) மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் தற்போதைய அதிபர் ஏ. ராஜாப்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், நிர்வாகப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்சீவன் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய அதிபருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதன்போது பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் புதிய அதிபர் எம்.ஏ. அஸ்தரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

நீண்டகால அதிபர் சேவை அனுபவத்தைக் கொண்ட எம்.ஏ. அஸ்தர், மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பாடசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கிழட்டுச்சிங்கம் வருமாம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் போடும் ‘சீன்’!

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி...

இலங்கையில் இனி சிம் அட்டை பெறும் முறையில் பெரும் மாற்றம்

சட்டவிரோதச் செயல்களுக்கு அலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய இணைப்புகளுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்