காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

Date:

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில் 28 வயதுடைய கட்டிடத் தொழிலாளியான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி நூரானியா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் சம்பவ தினமான இன்று பிற்பகல்  கட்டிட தொழிலாளி    கட்டுமானப் பணியினை மேற்கொண்டு வந்த போது தூண் இடிந்து  அவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து  வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்