கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

Date:

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி, தற்​காலிகப் பணி​யாக இருக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை​யின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் தீரன் திரு​முரு​கன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செய​லா​ளர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​ விவரம்: கரூரில் தவெக சார்​பில் கடந்​தாண்டு நடந்த பிரச்​சா​ரக்கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்​தக்குடும்​பங்​களைச் சேர்ந்​தோ ருக்கு அரசு வேலை வழங்​கப்​படு​கிறது. ஏற்​கெனவே உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு அரசு சார்​பிலும், தவெக சார்​பிலும் நிதி உதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

அரசி​யல் கட்​சிக் கூட்​டங்​களில் நெரிசலில் சிக்கி உயி​ரிழப்​போருக்கு அரசு வேலை வழங்​கு​வது தவறான முன் உதா​ரணத்தை ஏற்​படுத்​தும். அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம், வேலை​வாய்ப்பு அலு​வல​கங்​கள் அல்​லது பிற சட்​டப்​பூர்வ பணி​யாளர் தேர்வு முறையைப் பின்​பற்​றியே அரசுப் பணி வழங்​கப்பட வேண்​டும். இந்த முறை​களைப் பின்​பற்​றாமல் அரசுப் பணி வழங்​கு​வது சட்​ட​விரோதம்.

மேலும் இந்​தச் செயல்​பாடு தமிழகத்​தில் அரசுப் பணிக்​காக கடுமை​யாகப் படித்து வரும் லட்​சணக்​கணக்​கான இளைஞர்​களுக்​குப் பாதிப்பை ஏற்​படுத்​தும். மேலும் கரூர் சம்​பவம் தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. இந்​நிலை​யில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​துக்கு அரசு வேலை வழங்​கு​வது விசா​ரணை​யைப் பாதிக்​கும்.

எனவே, கரூர் கூட்ட நெரிசல் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தோரின் குடும்​பங்​களுக்கு நேரடி​யாக அரசு வேலை வழங்​கத் தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் கார்த்​தி​கேயன், சக்​திவேல் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது நீதிப​தி​கள், “உயி​ரிழந்​தோரின் குடும்​பம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. அந்த குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கு​வ​தில் என்ன தவறு? அவர்​களுக்​குப் பொருளா​தார உதவி தேவை தானே?” என்​றனர்.

அரசுத் தரப்​பில், “வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. விசா​ரணையை உச்ச நீதி​மன்​றம் கண்​காணித்து வரு​கிறது. அரசு கொள்கை முடி​வெடுத்து உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்​துள்​ளது. பணி நியமன ஆணை வழங்​கும் நாளில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது” என கூறப்​பட்​டது.

அதற்கு நீதிப​தி​கள், “அரசின் கொள்கை முடிவு என்​றால் சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தில் அறி​விப்பு வெளி​யிடப்​பட்​ட​தா?” எனக் கேள்வி எழுப்​பினர்.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: உச்ச நீதி​மன்​றத்​தில் அண்​மை​யில் தாக்​கல் செய்த மனு விசா​ரணைக்கு வந்​த​போது உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​துக்கு அரசு சார்​பில் ஏற்​கெனவே இழப்​பீட்​டுத் தொகை வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், தற்​போது கருணை அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பு வழங்க முடிவு செய்​திருப்​ப​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது. இருப்​பினும் அந்த மனுவை திரும்​பப் பெற​வும், மனு​தா​ரர் தரப்பு பிற சட்​டப்​பூர்வ தீர்​வு​களை நாட​வும் உச்ச நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது.

மனு​தா​ரர்​கள் தரப்​பில், கரூர் நெரிசல் சம்​பவத்​தில் துர​திருஷ்ட​வச​மாக உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்​குக் கருணை அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பு வழங்​கு​வது விதி​களை மீறும் செயல் என வாதிடப்​பட்​டது. பணி​யில் இருக்​கும்​போதே உயி​ரிழக்​கும் அரசு ஊழியரின் சட்​டப்​பூர்வ வாரிசு​தா​ரர்​களுக்கு கருணை அடிப்​படை​யில் வேலை வழங்​கு​வது தொடர்​பாக விதி​முறை​கள் மற்​றும் வழி​காட்​டு​தல்​கள் உள்​ளன.

தூத்​துக்​குடி​யில் நடை​பெற்ற துப்​பாக்​கிச் சூடு சம்​பவத்​தில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தைச் சேர்ந்த ஒரு​வருக்கு வேலை வழங்​கப்​பட்​டுள்​ளது என அரசுத் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. அந்​தச் சம்​பவத்தை அரசின் தீவிர நடவடிக்​கை​யின் விளை​வாகக் கருதலாம் என சிறிய வேறு​பாட்​டைச் சுட்​டிக்​காட்​டலாம். எப்​படி​யிருந்​தா​லும் அரசின் கொள்கை முடி​வில் இந்த நீதி​மன்​றம் தலை​யிடு​வது மிக​வும் குறுகிய கண்​ணோட்​ட​மாக அமை​யும்.

எனவே, கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தோருக்கு வழங்​கப்​படும் வேலை​வாய்ப்பு என்​பது நீதி​மன்ற மறுஆய்​வுக்கு உட்​பட்ட தற்​காலிக அடிப்​படை​யில் மட்​டுமே இருக்​கும் என்ற நிபந்​தனை​யுடன் பணி நியமன ஆணை வழங்க அனு​மதி வழங்​கப்​படு​கிறது. வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்ட நபர்​கள் தங்​கள் முதல் சம்​பளத்​தைப் பெறு​வதற்கு முன்​பாகவே இம்​மாத இறு​திக்​குள் முக்​கிய விவ​காரங்​கள் குறித்து விசா​ரிக்க நாங்​கள் உத்​தேசித்​துள்​ளோம். இந்த நிபந்​தனை​களின் அடிப்​படை​யில் பணி நியமன நடவடிக்​கை​யைத் தொடல​ராம்.

இந்த வழக்கு 21.07.2026 பிற்​பகல் 2.15 மணிக்கு விசா​ரணைக்கு எடுக்​கப்​படும். அப்​போது தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் உறுப்​பினர் செயலர், கருணை அடிப்​படை​யில் வேலை வழங்​கு​வதற்​கான வழி​காட்​டு​தல்​கள் மற்​றும் கரூரில் வழங்​கப்​பட்​டுள்ள வேலை​வாய்ப்​பில் அந்த வழி​காட்​டு​தல்​கள் பொருந்​து​மா? என்​பது குறித்த அறிக்​கையை தாக்​கல் செய்ய வேண்​டும். இதற்​காக டிஎன்​பிஎஸ்சி உறுப்​பினர் செயலரை நீதி​மன்​றம் தா​மாக முன்​வந்து எதிர்​மனு​தா​ர​ராகச்​ சேர்க்​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ கூறியுள்​ளனர்​.

spot_imgspot_img

More like this
Related

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...

பொலிசார் போல நடித்து வெளிநாட்டவரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது!

சுற்றுலா பொலிசார் போல் நடித்து, பிரேசில் நாட்டவர் ஒருவரைக் காவலில் வைத்து,...

ஈரான் கேட்டதால் பேச்சு நடத்த தயார்… ஆனால் போர் நிறுத்தம் முறிந்து விட்டது!

பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் கோரியதாகவும், அதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் போர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்