கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற கௌரவ கருணாகரனுக்கு கல்முனையில் பிரியாவிடை

Date:

கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகச் சிறப்பாகப் பணியாற்றி பதவி உயர்வு பெற்று தற்போது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள கௌரவ தர்மரட்ணம் கருணாகரன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு, கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மருதமுனை மூன் வில்லேஜ் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான திருமதி ஆரிக்கா காரியப்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ மேல்நீதிமன்ற நீதிபதி தர்மரட்ணம் கருணாகரன் அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும், கல்முனை மேலதிக மாவட்ட நீதிபதி கௌரவ கே.எல்.எம். சாஜித் அவர்களும், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகளும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய சட்டத்தரணிகள், கௌரவ கருணாகரன் அவர்கள் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் ஆற்றிய நேர்மையான, திறமையான மற்றும் நீதி நெறி சார்ந்த சேவைகளை உயர்வாகப் பாராட்டியதுடன், அவரது பதவி உயர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நீதித்துறைக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டும் வகையில் நினைவுச் சின்னங்களும் வாழ்த்துப் பாக்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உணர்வுபூர்வமான சூழலில் நடைபெற்ற இப்பிரியாவிடை நிகழ்வு, நீதிபதி தர்மரட்ணம் கருணாகரன் அவர்கள் கல்முனையில் ஆற்றிய சேவைக்கு சட்டத்தரணிகள் சமூகம் செலுத்திய உயரிய மரியாதையின் வெளிப்பாடாக அமைந்ததுடன், அவரது எதிர்கால நீதித்துறைப் பணிகளுக்கும் அனைவரும் தங்களது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்