உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே விவகாரத்தில் தலையிடுமாறு கோரி, அவருடைய குடும்ப உறவினர்கள் பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு இன்று (23) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அது தொடர்பான கடிதம் இலங்கையிலுள்ள பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதியான அப்போஸ்தலிக்க நுன்சியோ ஆயரிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததைத் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை முன்னேறி, கோட்டாபய ராஜபக்ச மீது பயணத்தடை விதிக்கப்பட்டதையடுத்து, சுரேஷ் சாலேயின் நடவடிக்கையில் அசாதாரண மாற்றம் நிகழ்ந்து, இந்த உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார்.
அத்துடன், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. தனது கையடக்க தொலைபேசி, மடிக்கணினிகளின் கடவுச்சொல்லையும் விசாரணையாளர்களுக்கு வழங்க மறுத்து வருகிறார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரை போலவுமே சுரேஷ் சாலே நடத்தப்பட்டு வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் “ஒரு நாடகத்தை“ அரங்கேற்றி வருகிறார்கள்.
சுரேஷ் சாலே மீது மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் பிரயோகிக்கப்படுவதாக அவர்கள் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.
சுரேஷ் சாலே மீதான விசாரணையை நிறுத்த வைக்கதே இதன் பின்னணி நோக்கமென கருதப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, சுரேஷ் சலேயின் குடும்ப உறவினர்கள் பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம் ஒன்றை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.




