களுதாவளை தவிசாளரிற்கு கடிவாளமிடுங்கள்!

Date:

மண்முனை தென்எருவில்பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்திற்கு முரணாக தன்னிச்சையாக செயல்பட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதுடன் பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் உறுப்பினர் யோ. சந்திரகுமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 6ம் திகதி திங்கட்கிழமை அனுப்பப்பட்ட கடித்தில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தொடர்ச்சியாக சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு வருவதோடு, தன்னிச்சையான முடிவுகளையும் எடுப்பதனால் சபையில் பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதுடன் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதுடன் பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.

பிரதேச சபையில் இதுவரை காலமும் பல மோசடிகள், சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன அவற்றை கடந்தகாலங்களில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம். அதனை மீண்டும் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

கடந்த 08.07.2025 அன்று 10 லோட் கழிவு மண் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டு அவரது காணியில் பறிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய பணம் ரூபா 80000.00 தவிசாளரால் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டதாக அறிய முடிகின்றது. ஆனால் ஒரு மாதம் முடிந்தும் இன்றுவரை (06.08.2025) அது பிரதேச சபைக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் தவிசாளரினால் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறே கடந்த 11.07.2025 அன்று ருபா 4500.00 பெறுமதியான 375 கிலோ சேதனப்பசளை போரதீவுப் பற்று பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பணம் இன்றுவரை (06.08.2025) பிரதேச சபைக்கு செலுத்தப்படவில்லை. இப் பணத்தினையும் சபைக்கு செலுத்தாமல் தவிசாளர் கையாடல் செய்துள்ளார்.

31.07.2025 அன்று வலயக் கல்வி அலுவலகத்திற்கு ரூபா 6000.00 பெறுமதியான 500 கிலோ சேதனப்பசளை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பணம் இன்றுவரை (06.08.2025) பிரதேச சபைக்கு செலுத்தப்படவில்லை. இப் பணத்தினையும் சபைக்கு செலுத்தாமல் தவிசாளர் கையாடல் செய்துள்ளார்.

தவிசாளர் அலுவலக லேன் குரோசர் வாகனத்தை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றார்;. 26.07.2025 மற்றும் 27.07.2025 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி பகுதியில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தனது கட்சி உறுப்பினர்களை ஏற்றிச் சென்றுள்ளார்.

02,08.2025 மற்றும் 03,08.2025 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அலுவலக வாகனத்தில் தனது தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு சென்றுள்ளார். குறித்த வாகனத்தின் எரிபொருள் செலவு அதிகம் என்பதுடன் பராமரிப்பு செலவும் அதிகம். இருந்தபோதும் தனது தனிப்பட்ட மற்றும் கட்சியின் தேவைகளுக்காக நீண்ட தூர பயணங்களுக்கு இவ் வாகனத்தினைப் பயன்படுத்தி வருகின்றார்.

சபை அமர்வுகளின்போது உறுப்பினர்களை பேச விடாது தடுப்பதுடன் பேச முன்வருகின்ற உறுப்பினர்களை வெளியேற்றுவேன் என மிரட்டுதல் மற்றும் சபை கூட்டங்களில் எடுக்கப்படாத தீர்மானங்களை கூட்டக்குறிப்புகளில் உட்புகுத்தல், சபை அனுமதியின்றி வேலைவாய்ப்பு வழங்குதல்

சபை உத்தியோகத்தர்களை உள்ளக மற்றும் சபைகளுக்கிடையே இடமாற்றம் செய்தல், சபை அனுமதியின்றி திட்டங்களை செயற்படுத்தல் உதாரணமாக ஆங்கிய பாலர் பாடசாலை அமைத்தல், இதன் மூலம் பெருமளவு நிதி சபை அனுமதியின்றி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளன.

தனக்கு ஆதரவு வழங்காத உறுப்பினர்களுக்கும் அவர்களுக்குரிய வட்டாரங்களிலும் எந்தவிதமான திட்டங்களையும் செயற்படுத்தாது பழி வாங்குதல். செயலாளரின் அனுமதியின்றி அவரது மடிக் கணினியினை திருடியதாக செயலாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

செயலாளரின் அலுவலக அறையினை பூட்டி வைத்துள்ளதுடன் செயலாளர் அலுவலகம் சென்றபோது தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். இவ்விடயங்கள் தொடர்பில் செயலாளரால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் பொலிசார்கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்பொழுது செயலாளர் தனது கடமைகளை உளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திலிருந்து மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளார். உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திலிருந்து தனது கடமைகளை செய்வதனால் சபை நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும். ஒரு அரச அதிகாரியினை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஒரு அரசியல்வாதிக்கு உண்டா? தவிசாளருக்கு இவ் அதிகாரங்களை யார் வழங்கியது.

சபையின் உத்தியோகத்தர்களை கடமை நேரத்தில் தனது கட்சி சார்ந்த மற்றும் தனது நிகழ்வுகளில் பங்குபற்ற செய்தல். தேர்தலில் தோல்வியடைந்த தனது கட்சி உறுப்பினர்களைக் கொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

சபை அனுமதியின்றி களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் கருவள சிகிச்சை நிலையத்தினை செயற்படுத்துவதற்கு சபையின் நிதியினை பயன்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருதல்.

தனது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டு மக்களை குழப்பும் வகையில் தன்னிச்சையான முடிவுகளை எடுத்தல் (தனியார் வகுப்புக்களை கட்டுப்படுத்தல், ஆலயங்களில் நிதி அறவிடல், 20 வயதுக்கு உட்பட்டவர்கள் வெதுப்பக வாகனங்கள் ஓடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை சபை அனுமதியின்றி எடுத்தல்.

தனக்கு எதிராணியில் உள்ள உறுப்பினர்கள்மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிசில் பொய்யான முறைப்பாடுகளை பதிவு செய்து உறுப்பினர்களை அச்சுறுத்தல். தனிப்பட்ட அரசியலுக்காக சபையில் எடுக்கப்படாத தீர்மானங்களை சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடல்.

மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் தங்களுக்கும், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி உள்ளூராட்சி ஆணையாளருக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம் ஆனால் இவ்விடயம் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தவிசாளர் தொடர்ந்தும் மோசடிகளில் ஈடுபடுவதுடன் சட்டத்திற்கு முரணான வகையில் அதிகார துஸ்பிரயோகம் செய்துவருவதனால் சபை நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதுடன் பொது மக்கள் சேவையினைப்பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து சபையினை சிறப்பாக கொண்டு செல்வதற்கு ஆவண செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றேன் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியை அனுமதியின்றி கடக்க முற்படும் கப்பல்கள் தகர்க்கப்படும்: ஈரான்!

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக்...

எருமை மாட்டை சுட்டுக்கொன்ற இருவர் கைது!

மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை...

மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்த கடற்படை புலனாய்வாளர்கள்!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்