வவுனியாவில் வீதியோரங்களில் மரங்களை நாட்டும் நற்காரியமொன்றினை இரு இளைஞர்கள் முன்னெடுத்துள்ளமை தொடர்பில் பலரது பாராட்டும் உந்துதலும் கிடைத்து வருகின்றது.
வவுனியாவை சேர்ந்த கிருஸ்ணன் சண்முகபிரியன் மற்றும் வின்சன் மதுசன் என்ற இரு இளைஞர்களுமே இம் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக 100 மரங்களை வீதியோரமாக நாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வீதியோரங்களில் மக்களால் வீசப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் இடையூறான விடயமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாம் மரங்களை நாட்டுவதுடன் உக்காத கழிவுப்பொருட்களையும் அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதனால் தமது மக்கள் வீதியோரங்களில் கழிவுப்பொருட்களை வீசுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தம்மால் முன்னெக்கப்படும் முயற்சிக்கு மக்களின் அதரவு கிடைக்கும் என்ற எதிர்ப்பாப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் மரங்களை தம்மிடம் வழங்கும் பட்சத்தில் மரங்களை வீதியோரங்களில் நடும் செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.