விமானி சாய் ரோஷன் ஷாமை மணந்தார் நடிகை ஜனனி

Date:

நடிகை ஜனனி தனது காதலர் சாய் ரோஷன் ஷாமை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாலா இயக்கிய ’அவன் இவன்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஜனனி. அதனைத் தொடர்ந்து ‘தெகிடி’, ‘அதே கண்கள்’, ‘பலூன்’, ‘பஹீரா’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி சில மலையாள படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த ஜனனிக்கும், துபாயில் விமானியாக பணிபுரிந்து வரும் சாய் ரோஷன் ஷாமுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், குடும்பத்தினர் மற்றும் ஜனனிக்கு நெருங்கிய திரையுலக நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.

இந்த திருமணத்துக்கு திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனனி தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நாதக சட்டப்பேரவை செல்ல வேண்டும்.. ஏனெனில்? – ஆதரவுடன் விவரிக்கும் சேரன்

நாம் தமிழர் கட்சியினர் சட்டப்பேரவை செல்ல வேண்டும் என்று நீண்ட விளக்கத்துடன்...

மாணவனை துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது!

மாத்தளை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர், மாணவர் ஒருவரை பாலியல்...

ஏப்ரல் 1 இரட்டை இலக்க வாகனங்களும் எரிபொருள் நிரப்பலாம்!

நாளை (ஏப்ரல் 1) ஒற்றை மற்றும் இரட்டை பதிவு எண்கள் கொண்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்